புதன், 7 நவம்பர், 2012


2012-ல் உலகம் அழியாது : சிருங்கேரி பீடாதிபதி உறுதி
இந்தியாவில் புகழ் பெற்று திகழும் பீடாதிபதிகளுள் சிருங்கேரி பீடாதிபதி ஸ்ரீபாரதி தீர்த்த மகாசுவாமிகளும் ஒருவர். உலகம் முழுவதிலும் உள்ள இந்து கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்து வருகிறார். அவர் நேற்று ஆந்திர
மாநிலம் காளகஸ்தியில் உள்ள வாயுலிங்கேஸ்வரர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார்.

வெளியே வந்த அவரிடம் நிருபர்கள் சூழ்ந்து கொண்டு 2012-ம் ஆண்டு உலகம் அழிந்து விடும் என்று ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்கள் கூறி வருகிறார்களே? என்றனர். 
இதற்கு அவர்,  ‘’2012-ம் ஆண்டு உலகம் அழிந்து வரும் என்று ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்கள் உலகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இதனால் பொதுமக்கள் கலக்கம் அடைந்துள்ளனர். இந்துமத சாஸ்திரப்படி 2012-ல் உலகம் ஒருபோதும் அழியாது. இந்த உலகம் அழிய இன்னும் பல ஆயிரம் வருடங்கள் உள்ளன.
எனவே பொதுமக்கள் யாரும் பீதி அடைய தேவை இல்லை. சில மதத்தினர் உலகம் அழியும் என்று வதந்தி பரப்புவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் இப்படி வதந்தி பரப்புபவர்களை யாரும் நம்ப மாட்டார்கள்’’ என்று பதிலளித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக