புதன், 7 நவம்பர், 2012

வழக்கில்  நக்கீரன்  கோபால், இணை ஆசிரியர் காமராஜ் இருவரையும் விடுதலை .  
ஞ்சை முனிசிபல் காலனி பகுதியில் சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனம் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 23.3.2001- அன்று நக்கீரன் இதழில் சுந்தரவதனம்,  அவரது மனைவி சந்தான லட்சுமி, தினகரன் குடும்பத்தினர்  அ.தி.மு.க.
வினரிடம் பணம் பெற்று கொண்டு வேட்பாளர் பட்டியலை தயாரித்து வருவதாக செய்தி வெளியானது. இதனால் அதிர்ச்சி அடந்த சுந்தரவதனம் நக்கிரன் இதழ் வெளியிட்ட செய்தியால் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டதாக கூறி கடந்த 12.6.2001 அன்று தஞ்சை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் (எண்-1) வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கு விசாரணை கடந்த 11 ஆண்டுகளாக தஞ்சை கோர்ட்டில் நடந்து வந்தது. இன்று இந்த வழக்கின்  தீர்ப்பு தஞ்சை கோர்ட்டில் அறிவிக்கப்பட இருந்தது. இதையொட்டி இன்று காலை 10 மணிக்கு நக்கீரன் கோபால், இணை ஆசிரியர் காமராஜ் ஆகியோர் தஞ்சை ஜெ.எம். 1 கோர்ட்டில் ஆஜரானார்கள். 

வழக்கை விசாரித்த நீதிபதி மாலதி, நக்கீரன் கோபால், இணை ஆசிரியர் காமராஜ் இருவரையும் விடுதலை செய்து தீர்ப்பு கூறினார். வழக்கில் விடுதலையானதும் நக்கீரன் கோபால் கோர்ட்டு வளாகத்தில் நிருபர்களிடம் கூறும்போது, இந்த வழக்கீன் தீர்ப்பு பத்திரிகை சுதந்திரத்துக்கு கிடைத்த வெற்றியாகும் என்றார். 

நக்கீரன் கோபால் தஞ்சை கோர்ட்டில் இன்று காலை ஆஜராக வந்த போது கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக